ஜெனிவா:
இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்துடனேயே நாடு முழுவதும் மே 24ந்தேதி முதல் முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் தொற்று பரவல் குறையாத நிலையில், 2வது கட்டமாக மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் கொரோனா பரவல் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தீவிரமானதைத் தொடர்ந்து, 3வது கட்டமாக மே 17ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் ஜூலை மாதம்தான் கொரோனாவின் அதிக அளவிலான தாக்கம் இருக்கும், அதன்பிறகே அதன் பாதிப்பு குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் கொரோனா பதிப்பு மே மாதத்துக்கு பின்னர் குறையும் என நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டும், அதன்பிறகே, அதன் பாதிப்பு குறையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது தற்போது, பாதிப்பு குறைவாக உள்ளது, ஆனால் மக்கள் நெருக்கமான வாழ்கின்றனர். இதுபோன்ற சூழலில், அங்கு தொற்று தீவிரமாக பரவினால் அதை கட்டுப்படுத்துவது கடினமானது.
இவ்வாறு அவர் கூறினார்.