பீஜிங்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1016 ஆகி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஜுபெய்ங் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.   அதன் பிறகு அந்த வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது.   இந்த ஆட்கொல்லி வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் பரவியதால்  உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம் செய்தது.

சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைவோர் மற்றும் மரணம் அடைவோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.  நேற்று காலை சீன அரசு வெளியிட்ட தகவலின்படி மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 908 ஆகவும் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 40171 பேராகவும் இருந்தது.  அதற்கு முந்தைய தினத்தன்று 91 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று மேலும் 108  பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்குப் பலி ஆகி உள்ளனர்.  இதனால் மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1016 ஆகி உள்ளது.   இந்த தகவல் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.   அத்துடன் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 2478 அதிகரித்து 42000 ஐ தாண்டி உள்ளது.