வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 93,839 உயர்ந்து 16,97,533 ஆகி இதுவரை 1,02,887 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,839 பேர் அதிகரித்து மொத்தம்16,97,533 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7003 அதிகரித்து மொத்தம் 1,02,687 பேர் உயிர் இழந்துள்ளனர். 3,766,109 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 49,830 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நேற்றைய பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,483 பேர் அதிகரித்து மொத்தம் 5,02,049 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2037 அதிகரித்து மொத்தம் 18,719 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 27,239 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 10,916 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5051 பேர் அதிகரித்து மொத்தம் 1,58,273 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 634 அதிகரித்து மொத்தம் 16,081 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55,568 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7371 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3961 பேர் அதிகரித்து மொத்தம் 1,47,577 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 570 அதிகரித்து மொத்தம் 18,849 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 30,455 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3497 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரான்சில் நேற்று 987 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 13,197 ஆகி உள்ளது. இங்கு நேற்று 7120 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,24,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 875 பேர் அதிகரித்து மொத்தம் 7600 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 22 அதிகரித்து மொத்தம் 249 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 774 பேர் குணம் அடைந்துள்ளனர்.