டில்லி

ன்று கொரோனாவால் 1463 பேர் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிர் இழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  அதையொட்டி இன்று தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி தேசிய ஊரடங்கை வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.  ஏற்கனவே பல மாநிலங்களில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவால் 29 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகு இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10815 ஆகி உள்ளது.  மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 353 ஆகி உள்ளது.   இந்தியாவில் 1190 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இந்த தகவல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.