சென்னை:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்கவும் 2 வாரங்கள் தடை விதித்து உள்ளது.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அனைத்து கல்வி நிறுவனங் களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கூடும் மால்கள், சினிமா தியேட்டர்கள், கடற்கரைகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டுகோள் விடுத்தள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்கவும் 2 வாரங்களுக்கு தடை விதித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, கைதிகளை வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞர்களோ, உறவினர்களோ சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.