கொரோனா தடைகாலத்தில் திரையுலக தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா நிதியாக சுமார் 3 கோடிக்கும் அதிகமாக நிதி அளித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவர் மாற்று திறானாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தனது அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார். அதில் குழந்தைகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது,
‘எனது டிரஸ்ட்டில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. அவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். சேவைதான் கடவுள். நான் செய்த சேவைகள் தான் என் குழந் தைகளை காப்பாற்றி இருக்கிறது . இதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியை குழந்தைகளின் கொரோனா பரிசோதனைக்கு உதவிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, மாநகராட்சி கமிஷனர் ஜி. பிரகாஷ் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோரின் சுயநலமற்ற சேவைக்கும் எங்களது நன்றி’ என்று ராகவா லாரன்ஸ் கூறினார்.