டெல்லி:
நாடு முழுவதும் ஜன்தன் கணக்கு வைத்துள்ள சுமார் 4.07 கோடி பெண்களுக்கும் தலா ரூ.500 கொரோனா நிவாரண நிதியாக மத்தியஅரசு செலுத்தி உள்ளது. இதை எடுக்க வங்கிகளில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை பெண்களுக்கு ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்தியஅரசு அறிவிததிருந்தது
அதன்படி, முதல்கட்டமாக 4.07 கோடி ஜன்தன் கணக்காளர்களுக்கு தலா ரூ.500 செலுத்தப் பட்டு உள்ளதாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்தக்கட்டமாக 20 கோடியே 39 லட்சம் ஜன் தன் கணக்குகளுக்கும் பணம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இந்த பணத்தை அவர்கள் எடுக்க குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் வங்கிகளில் கூட்டம் குவிவதை தடுக்கவே நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி பணம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]