சென்னை:

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு நிதி கோரியிருந்த நிலையில், இதுவரை ரூ.101 கோடி வந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி வழங்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அதன்படி தற்போதுவரை ரூ.101 கோடி  முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி,  . பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் என்றும்,  கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் தங்களால் இயன்றளவு நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.