டெல்லி: கொரேனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்தியஅமைச்சர் ஹா்ஷ்வா்தன் ஆலோசனை நடத்துகிறார். நாளை பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதால், இன்று அமைச்சர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
சுகாதாரத் துறை அமைச்சக தகவல்படி மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், கா்நாடகம், உத்தர பிரதேசம், தில்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமுள்ளது. தேசிய அளவில் கரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 1 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், மேற்கண்ட 8 மாநிலங்களில்தான் 81.90 சதவீத புதிய பாதிப்புகள் உள்ளன.
அதன்காரணமாக, கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், டெல்லி, குஜராத், அரியான, ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், கா்நாடகம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் மத்திய அமைச்சர் ஆலேசனை நடத்துகிறார்,.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.