வாஷிங்டன்

லகெங்கும் நேற்று மட்டும் 71,377 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் 12,72,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று உலக அளவில் கொரோனா பாதிப்பு 71,737 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 12,72,860  ஆகி உள்ளது. நேற்று 4734 பேர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 69424 ஆகி உள்ளது.  இதுவரை 2,62,217 பேர் குணம் அடைந்துள்ளனர்.   45,619 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்றும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அனைத்து நாடுகளையும் விட அதிகமாக உள்ளது.

அமெரிக்கா : நேற்று 23,316 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,36,673 ஆகி உள்ளது.  இது உலக அளவில் மிகவும் அதிகமாகும்.  நேற்று 1165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் மரணம் அடைந்தோர் 9616 பேர் ஆகும். குணமடைந்தோர் எண்ணிக்கை 17977 ஆகவும் 8702 பேர் அபாய நிலையிலும் உள்ளனர்.

ஸ்பெயின் : நேற்று 5,478 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,31,646 ஆகி உள்ளது.  இது உலக அளவில் இரண்டாம் இடமாகும்.  நேற்று 694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் மரணம் அடைந்தோர் 12641 பேர் ஆகும். குணமடைந்தோர் எண்ணிக்கை 38080 ஆகவும் 6801  பேர் அபாய நிலையிலும் உள்ளனர்.

இத்தாலி: நேற்று 4316 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,28,948 ஆகி உள்ளது.  நேற்று 525 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் மரணம் அடைந்தோர் 15887 பேர் ஆகும். இது உலக அளவில் முதல் இடமாகும்.    குணமடைந்தோர் எண்ணிக்கை 21815 ஆகவும் 3977  பேர் அபாய நிலையிலும் உள்ளனர்.

இந்தியா : நேற்று 700 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 4288 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் மரணம் அடைந்தோர் 117 பேர் ஆகும். குணமடைந்தோர் எண்ணிக்கை 134 ஆகவும் 141  பேர் அபாய நிலையிலும் உள்ளனர்.