அண்டார்டிகா: உலகின் பனிக் கண்டமான அண்டார்டிகாவில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்ற கொடுமையான செய்தி வெளியாகியுள்ளது.
அண்டார்டிகாவில், மனிதர்கள் நிரந்தரமாக வாழ்வதில்லை. ஆனால், எப்போதும் அங்கு ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். தற்போதைய நிலையில் அங்கு 1000 ஆய்வாளர்களும், பிற பணியாளர்களும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அங்கு 36 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு அமைந்திருக்கும் சிலி நாட்டு ஆராய்ச்சிக்கூடத்தில், 26 சிலி ராணுவ வீரர்களுக்கும், 10 ஆராய்ச்சி நிலையப் பராமரிப்பாளர்களுக்கும் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 36 பேரும், சிலி நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.