சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை தகவல் தெரிவிக்க வேண்டிய நோய் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது தமிழக அரசு.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, கர்நாடகா மற்றும் டெல்லியில தலா 1 முதியவர் என்று இறந்த நிலையில், பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தொடர்பான விபரங்களை மருத்துவமனைகள் மற்றும் அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை(மார்ச் 16) மீண்டும் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.