நியூயார்க்: அமெரிக்காவில் அன்றாடம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குவதால், அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்கள், அந்நாட்டு மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமென அழுத்தமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று மட்டும், புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 181100 என்பதைத் தாண்டியது. மேலும், அடுத்த நாளான சனிக்கிழமை அந்த எண்ணிக்கை 121000 என்பதாக இருந்தது. அதாவது, 323 அமெரிக்கர்களில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

கடந்த வாரத்தில் மட்டும், தினசரி பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 140000க்கும் அதிகமாக உள்ளது. அந்நாட்டின், 49 மாநிலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது.

அதேசமயம், அந்நாட்டின் 30 மாகாணங்களில் கடந்த 1 வாரத்தில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை மட்டும், முன் எப்போதுமில்லாத ஒன்றாக இருந்தது.

அதாவது, கடந்த ஒருவாரத்தில் மட்டும் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும், நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேலான அமெரிக்கர்கள் கொரோனா தொற்றால் மரணமடைகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

[youtube-feed feed=1]