ண்டன்

கொரோனா அச்சுறுத்தலால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் லண்டனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவுக்குள் சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஐரோப்பாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதில் இங்கிலாந்து நாடும் ஒன்றாகும் இங்கு பல இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.   அவர்களால் தற்போது இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இங்குள்ள மாணவர்கள் பலர் சிறு சிறு அறைகளில் தங்கி வருகின்றனர்.  மேலும் ஒரே கழிவறை மற்றும் குளியலறையை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.   இதனால் மாணவர்கள் கொரோனா பரவக்கூடும் என அச்சத்தில் உள்ளனர்.

மேலும் உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.  பயணத் தடை காரணமாக அவர்களால் இந்தியாவுக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி மாணவர்கள் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் இங்கிலாந்தில் உள்ள மாணவர்கள் பெயர், பாஸ்போர்ட் விவரங்கள், முகவரி உள்ளிட்டவற்றை சேகரித்துள்ளனர்.

இந்த விவரங்களை இ மெயில் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பி தங்களை  இந்தியாவுக்கு  அழைத்துச் செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இந்த மாணவர்களின் கல்வி விசாவும் தற்போது முடியும் தறுவாயில் உள்ளது.  இந்த மாணவர்கள் கேரளா, தமிழகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.