சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு 8 பயணிகள் ரயில்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல ரயில்கள் நிறுத்தப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், தொற்று பரவல் குறைந்ததால் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கின. தற்போது கொரோனா 3வது அலை தொடங்கி உள்ளதால், ரயில் சேவைகளிலும் தடங்கல் ஏற்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,
- நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ்,
- கொல்லம் -திருவனந்தபுரம் ,
- கோட்டயம் – கொல்லம்,
- திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல்
- சர்வாட்டூர் தொடங்கி மங்களூர் விரைவு ரயில் ,
- கண்ணனூர் தொடங்கி சர்வாட்டூர் ரயில் சேவைகளும் இன்று முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மங்களூர் தொடங்கி கோழிக்கோடு விரைவு ரயில் மற்றும்
- கோழிக்கோடு தொடங்கி கண்ணூர் விரைவு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.