சென்னை:
சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபலமான பீனிக்ஸ் மாலுக்கு சென்று திரும்பிய தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப் ஸ்டைல் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள் அந்தக்கடைக்குச் சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், அந்த மாலுக்கு சென்ற சவுகார்பேட்டையைச் சேர்ந்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும், நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்முடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது வீட்டுக்கு அருகே உள்ளவர்களையும் தனிமைப்படுத்துதலில் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.