கொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு

Must read

பஹ்ரைன்

இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது.

சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.

இதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

குவைத்தில் நேற்று முதல் பலி பதிவானது.

நேற்று கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 46 வயதுள்ள இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 479 ஆக அதிகரித்துள்ளது.

குவைத்தில் பணிபுரியும் 24 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வங்க தேசத்தை சேர்ந்த இருவர் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article