மும்பை:
கொரோனா பாதிப்பு எதிரொலியாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் கடந்த மாதம் 20ம் தேதியில் தொடங்கி, இந்த மாதம் 23ம் தேதி வரை மொத்தம் 5.68 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் இழந்தனர்.
பின்னர், 27ம் தேதியும் 30ம் தேதியும் பங்குச்சந்தையில் 3.35 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்தன. ஆனால், நேற்று காலை முதலே பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1.203.18 புள்ளிகள் சரிந்து 28,265.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 343.95 புள்ளிகள் சரிந்து 8,253.80 ஆகவும் இருந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு 3,20,633.05 கோடி இழப்பு ஏற்பட்டது.
நிதியாண்டின் முதல் நாளிலேயே இழப்பு ஏற்பட்டது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.