டில்லி

கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவருக்கும் காப்பீடு அளிக்கக் காப்பீட்டு நிறுவனங்கள் தயங்கி வருகின்றன.

கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.   இந்த கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள நிலையில் மருத்துவர்கள், செவ்லியர்க்ள், சோதனை ஊழியர் எனப் பல சுகாதார ஊழியர்கள் உள்ளனர்.   இந்திய மருத்துவ சங்கத்தின் தக்வலின்ப்டி இந்தியாவில் இதுவரை சுமார் 99 மருத்துவர்கள் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.  எனவே அவர்களுக்குச் சங்கம் ஏற்கனவே எச்சரிக்கை அளித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அடைவோருக்கு மருத்துவச் சிகிச்சைக்காக கொரோனா கவச் என்னும் பாலிசி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  இது பொது மக்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.  இதில் யாரும் இணையலாம் என்றாலும் காப்பீட்டு நிறுவனங்கள் சுகாதார ஊழியர்களுக்குக் காப்பீடு பாலிசி அளிக்கத் தயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காப்பிட்டுச் சீரமைப்பு ஆணையம் அளித்துள்ள அறிவிப்பில், “சுகாதார ஊழியர்களுக்குக் காப்பிடு பாலிசி வழங்கக் காப்பிட்டு நிறுவனங்கள் தயங்குவதாகத் தகவல்கள் வெளியாகி  உள்ளன.  இது தவறான நடவடிக்கையாகும்.  தற்போதுள்ள நிலையில் இவர்கள் அதிக அபாயத்தில் உள்ளதால் இவர்களுக்குக் காப்பிடு பாலிசி வழங்கத் தயக்கக் கூடாது.” எனத் தெரிவித்துள்ளது.