காத்மாண்டு:

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தி 835-ஐ தாண்டியுள்ளது.

சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா’ வைரஸ் உலகில் 137 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 700 பேர் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 68 ஆயிரத்து 939 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 199 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அங்கு 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் காரணமாக கடந்த சில நாள்களாக சீனாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு, கொரோனா தொற்றால் இதுவரை 1441 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 21,157 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் 611 பேர் உயிரிழந்த நிலையில், 12,729 நபர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் சுற்றுலாத் துறையை முடக்கிய கொரோனா  ஸ்பெயினில் 196 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில் 6,391 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இதுவரை 75 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும், 8 162 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,836ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75000 மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்