சத்திஸ்கர்:

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சத்திஸ்கர் மாநிலத்தில் வரும் 31ந்தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில முதல்வர்  பூபேஷ் பாகெல் (Bhupesh Baghel)  அறிவித்து உள்ளார்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக  தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பபட்டு உள்ளது. பல மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில்அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சள் குளங்கள், நூலகம் உள்பட மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் 31ந்தேதி வரை விடுமுறை விடப்படுவமாக மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்து உள்ளார்.