டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கையும் 308ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 857 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 149 பேரும், மத்திய பிரதேசத்தில் 36 பேரும் உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது,

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்  9,152 பேர்

உயிரிழிப்பு  308 பேர்

குணமடைந்தவர்கள் . 857 பேர் 

1) மஹாராஷ்டிரா – 1,985
2) டில்லி – 1,154
3) தமிழகம் – 1,075
4) ராஜஸ்தான் – 804
5) மத்திய பிரதேசம் -532
6) தெலுங்கானா- 504
7) குஜராத் -516
8) ஆந்திரா – 427
9) கேரளா -376
10) கர்நாடகா- 232

இந்தியாவில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் 364க்கும் அதிகமான மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 120 மாவட்டங்களில் கொரோனா பரவி உள்ளதாக கொரோனா பரவி உள்ளது. அதிகபட்சமாக உ.பி.,யில் 40 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 33 மாவட்டங்களிலும், மஹாராஷ்டிராவில் 27 மாவட்டங்களிலும், டில்லியில் 11 மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.