அறிமுகம்
கொரோனாவினால் உருவாகியிருக்கும் தீவிர நெருக்கடி, கிட்டத்தட்ட முழு உலகின் மக்கள் வளம் மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு நிச்சயமற்ற தன்மையை உண்டாக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் 1996 முதல் பதிவு செய்யப்பட்ட நிச்சயமற்ற நிலையில் உள்ள 143 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியல், உலகில் தோற்று நோய் பரவல் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படும் போதெல்லாம், உலகில் நிகழும் நிச்சயமற்றதன்மையும், இந்த இரு சொற்களுக்கு இடையேயான மறைமுக தொடர்பையும் விளக்குவதாக இருந்தது. தற்போதைய பட்டியல், நிச்சயமற்ற தன்மையை அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட தொடங்கியதில் இருந்து, நிகழ்ந்துள்ள உலகின் மிகப்பெரிய நிச்சயமற்ற நிலை என்றும், அதற்க்கு கொரோனா மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளது என்றும் கூறுகிறது.

 
 
Source: World Uncertainty Index
படம்: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு, மூலதனம் மற்றும் எஸ்டிஜிக்கள் போன்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் காரணிகளின் மீது கொரோனா பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரி செய்ய உலகின் அனைத்து நாடுகளும், உற்பத்தி மற்றும் வர்த்தகம் சார்ந்த உரிய கொள்கைகளை வகுப்பது இன்றியமையாதது.
பெரும் பொருளாதார காரணிகளின் மீதான தாக்கம்
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உலககின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை வீழ்ச்சியடைய வழிவகுத்துள்ளது. ஏப்ரல் 14 அன்று, சர்வதேச நாணய நிதியம் (சர்வதேச நாணய நிதியம்) அதன் உலகளாவிய வளர்ச்சி பற்றிய ஆய்வு முடிவுகளை கணித்து புதுப்பித்தது. இதன்படி, உலக பொருளாதாரமானது, பத்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வீழ்ச்சியை விட, பெரும் மோசமான வீழ்ச்சியை சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை, (UNDESA) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவுகளை ஆராய்ந்து, உலகப் பொருளாதாரம் மிக மோசமாக, 1 சதவீதம் வரை குறையலாம் என்று கணித்துள்ளது. இதேபோல், ஓ.இ.சி.டி மார்ச் மாத தொடக்கத்தில் உலகின் பெரும்பாலான முன்னேறிய நாடுகளின் முடக்குதல் நடவடிக்கைகளால், தவிர்க்க முடியாத வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தும் என்று கூறியது.

Source: UNIDO elaboration on EIUIMFOECD and UNDESA
வேலை வாய்ப்புகளின் மீதான தாக்கம்
படம்: உலகளாவிய தொழிலாளர் அமைப்பு, 2020 ஆம் ஆண்டில் வேலையின்மை 25 மில்லியனாக உயரும் என்று கணித்துள்ளது. இதனால், தொழிலாளர் வருமானத்தில் 860 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 3.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்படலாம், என்றும் இது துல்லியமான கணக்கீடு என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு இந்த கணக்கேடுகள் அனைத்தும் மிகக் குறைந்தபட்ச தாக்கங்களை கணக்கில் கொண்டுள்ளது என்றும், நிஜத்தில் இழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளது. இந்த அமைப்பின் சமீபத்திய கணக்கீடுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, தற்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சுமார், 2.7 பில்லியன் தொழிலாளர்களை பாதிக்கலாம என்றும், இது உலகின் மொத்த தொழிலாளர்களில் 81% என்றும் கூறியுள்ளது அச்சமூட்டுவதாக உள்ளது.
வளரும் நாடுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நெருக்கடி குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள தொழிலாளர்களை குறிப்பாக கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு முறைசாரா துறைகளில் பணிபுரிபவர்களின் பங்கு, எனவே போதுமான சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு குறைந்த அணுகல் உள்ளவர்கள் அதிகம். விஷயங்களை மோசமாக்குவதற்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே எதிர்பார்க்கப்படும் பாரிய வேலை இழப்புகள் பணம் அனுப்புவதை பெரிதும் நம்பியிருக்கும் பொருளாதாரங்களின் விளைவுகளைத் தட்டக்கூடும். மேலும், மேம்பட்ட பொருளாதாரங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே குறைந்த வர்த்தகம் மற்றும் முதலீடு மூலம் குறைந்த வளர்ந்த நாடுகளை பாதிக்கத் தொடங்கியுள்ளன.
வெளியேறும் முதலீடுகள்
நிதிச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மை மற்றும் பல நாடுகளில் பணபுலக்கத்தில் நிலவும் தட்டுப்பாடுகள் பல வளரும் நாடுகளில் இருந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில், முதலீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளது. முக்கிய வளரும் நாடுகளின் பொருளாதாரம், நிகர கடன் மற்றும் முதலீடு வெளியேற்றங்களை UNCTAD விளக்குகிறது. இதன்படி, தற்போதைய COVID-19 நெருக்கடி உலகளவில் (பிப்ரவரி 21 முதல் மார்ச் 24 வரை) சென்ற மாதத்தில் மட்டும் 59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான முதலீடுகளை வெளியேற செய்துள்ளது.
ஐ.நா.வின் கணிப்புப்படி, முதலீடுகளில், உலக அளவில் எட்டப்பட்ட சாதனைகள் அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படலாம். மேலும், வறுமை ஒழிப்பு முதலிய அபிவிருத்தி திட்டங்களில் பெறப்பட்ட முன்னேற்றங்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே நாடுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் நிகழும் இந்த நேரத்தில், கொரோன அதை மேலுக் கடுமையாக்கும். இதனால் 2௦3௦ ஆண்டுகளுக்கான நிலையான முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவது பாதிக்கப்படலாம். இதனால், முதலீடுகள் பாதிக்கப்படும் என்பதால் பல வளரும் நாடுகள் தொழில்மயமாக்கல் வாய்ப்புகளையும் கடுமையாக பாதிக்கும் என ஐ.நா அஞ்சுகிறது.
வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறையில் பாதிப்பு
COVID-19 வளரும் நாடுகளில் உற்பத்தி துறையை கடுமையாக பாதித்துள்ளது. ஏனெனில், 1) நெருக்கடி காரணமாக வளர்ந்த நாடுகளில் தேவை குறைந்துள்ளது. 2) தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகளிலிருந்து வரவேண்டிய தொழில்நுட்பம் வர தாமதம் 3) கொள்கைகள் ஒரு காரணம் (எ.கா. பொருட்கள் மற்றும் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது), பணியாளர்கள் பணிக்கு செல்ல இயலவில்லை மற்றும் நிதி புழக்கம் இல்லாமை உள்ளிட்ட காரணங்கள் உற்பத்தியை நேரடியாக பாதித்துள்ளன. ஐ.நா. பொருளாதார வல்லுநர்கள் 2020 பிப்ரவரியில் மட்டும், உற்பத்தி திறனில், சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு குறைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். உற்பத்தி பாதிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை பாதிக்கும், போர்ட்கள் தேக்கமடையும். இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, ஒட்டுமொத்தமாக வளரும் நாடுகள் (சீனாவைத் தவிர) 2020 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாயைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 800 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்கும் அபயம் உள்ளது என கூறப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் பாதிப்புகள்
உலகளாவிய பொருளாதார வாய்ப்புகளுக்கு ஏற்ப, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (ஏயூ) சமீபத்திய அறிக்கை, “நம்பிக்கையோ அல்லது அவநம்பிக்கையோ எதுவாக இருந்தாலும், கோவிட் -19 ஆப்பிரிக்காவில் தீங்கு விளைவிக்கும் சமூக பொருளாதார விளைவை ஏற்படுத்த்தியுள்ளது” என்கிறது. உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சி தொடர்பான இழப்புகள் 65 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியாவில் மட்டும் 19 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த நெருக்கடி பல்வேறு உற்பத்தி நிறுவனங்களையும் பாதித்துள்ளது. AU அறிக்கையின்படி, வாகனத் தொழில் (-44 சதவீதம்), விமான நிறுவனங்கள் (-42 சதவீதம்) மற்றும் எரிசக்தி மற்றும் அடிப்படை பொருட்கள் தொழில்கள் (-13 சதவீதம்) இன்னும் அதிக இழப்புகளை எதிர்கொண்டுள்ளன. வளரும் நாடுகளில் இலாபங்கள் குறித்த எம்.என்.இ வளர்ச்சி விகிதங்கள் 16% சரிந்துள்ளன. இந்த திருத்தம் ஆசியாவில் 18%, ஆப்பிரிக்காவில் 1%, லத்தீன் அமெரிக்காவில் 6% ஆக உள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் பாதிப்புகள்
லத்தீன் அமெரிக்காவில், பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.8% அளவிற்கான சரிவு, வேலையின்மை 10% அதிகரிப்பு மற்றும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 35 மில்லியனில் இருந்து, 220 மில்லியன் வரை உயர்ந்துள்ளது. ஆனால், அதன் மொத்த மக்கள் தொகையே, 620 மில்லியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 67.4 மில்லியனிலிருந்து 90 மில்லியனாக உயரக்கூடும். மேலும், இந்த நெருக்கடியால் வர்த்தகப் பொருட்கள் மற்றும் உணவின் விலை வீழ்ச்சி (சிலி மற்றும் பெருவுக்கு தாமிரம், பெருவுக்கு மீன் உணவு, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உருகுவேவுக்கு சோயா, உருகுவே மற்றும் அர்ஜென்டினாவுக்கு மாட்டிறைச்சி, ஈக்வடார் இறால்) அடையலாம். இதனால் வேறு வகையான மறைமுக தாக்கங்கள் ஏற்படலாம். ஏனெனில், லத்தீன் அமெரிக்க பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக திகழும் நாடாக சீனா உள்ளது.
ஆசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
கொரோனா வைரஸின் தீவிர பரவல் முதன்முதலில் சீனாவில் துவங்கியது. பிபிசியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் 13.5% சரிவை சந்தித்தது. சீனா உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்து, உலகளாவிய உற்பத்தி பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது. 6 மார்ச் 2020 திருத்தப்பட்ட பதிப்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2௦2௦ அவுட்லுக், சீனா நெருக்கடியின் மையமாக உள்ளது என்று வலியுறுத்தியது. ஆனால் வளரும் நாடுகளைக் கொண்ட ஆசியா 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தொழில்துறை உற்பத்தியில் 7.7% சரிவை மட்டுமே சந்தித்துள்ளது. உற்பத்தி ரீதியாக பாதிக்கப்படாத ஆசிய நாடுகளாக, இந்தியா, என்ஐஇ மற்றும் ஆசியான் 5 ஆகிய குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் தொழில்துறை உற்பத்தி குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது.
மீட்புக் கொள்கைகள் மற்றும் சமாளிக்கும் உத்திகள்
எகனாமிஸ்ட் அல்லது பைனான்சியல் டைம்ஸ் போன்ற முன்னணி செய்தி நிறுவனங்கள், அரசுகளை விரைவாகவும் தைரியமாகவும் செயல்பட அழைப்பு விடுத்துள்ளன. இது அரசியல் ரீதியான ஆதரவையும் பெற்றுள்ளது. தற்போதுவரை மறுக்கப்பட்டுவந்த பல பொருளாதாரக் கொள்கைகள், சமூக மற்றும் பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் நோக்குடன் பல நாடுகளில் மீண்டும் கடப்பிடிக்கபடுகின்றன.
தீர்வு அல்லது சீர்திருத்தம்
முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது திட்டமிடப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள் நீண்டகால திட்டமாக்கப்படலாமா, புதிய உட்கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு அவை வழி வகுக்க முடியுமா என்பதும் தற்போதைய நெருக்கடி நேரத்தில் சிந்திக்க வேண்டிய முக்கிய கேள்விகளாகும். தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் பிற சவால்களைச் சமாளிக்க சிறந்த முறையில் தயாராக உள்ள, சமமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நெகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்” என்று ஐ.நா ஒரு அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.
குறுகிய மற்றும் நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள்
COVID-19 நெருக்கடி காலத்தில், குறுகிய கால, நடுத்தர முதல் நீண்டகால நடவடிக்கைகளுக்கு இடையே பெரிய அளவிலான வேறுபடுகின்றன என்று ஆய்வுகள் தெளிவுப் படுத்தியுள்ளன.
முந்தைய நடவடிக்கையில், உடனடி சுகாதார நிலைமையை நிவர்த்தி செய்வதும், வருமானம் ஈட்டும் வாய்ப்புகளைப் பாதுகாப்பதும் மற்றும் முக்கியமான விநியோகச் சங்கிலிகளின் செயல்பாட்டைப் பாதுகாப்பதும் இதன் நோக்கம் ஆகும். உதாரணமாக, அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் விநியோகம். பிந்தைய நடவடிக்கையில், பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கான வழிமுறைகள், விநியோகச் சங்கிலிகளை மீட்டெடுத்தல், தேவையை மீட்டெடுத்தல் மற்றும் உற்பத்தி முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றன.
 
 உலக நாடுகளின் பொருளாதார மீட்புக் கொள்கைகள்
COVID-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஏற்படவிருக்கும் உடனடி மனித வளம் மற்றும் பொருளாதார ரீதியான விளைவுகளைத் தடுக்க சில வகையான மீட்புக் கொள்கைகளை வகுத்து வருகின்றன. பெருமளவிலான பொருளாதாரக் கொள்கைகளை கண்காணிக்கும் சர்வதேச நாணய நிதியம் (2020), (நாணயத்திற்கு எதிரான பரிமாற்ற விகிதம் மற்றும் நிலுவைகள், நாணய மற்றும் பெரும் நிதி  நடவடிக்கைகள்), ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக இடைவெளி மற்றும் முடக்குதல் நடவடிக்கைகள் (ஏதேனும் இருந்தால்) எவ்வளவு கடுமையான அல்லது தொலைநோக்குடன் தொடர்புடையவை என்பதற்கு அப்பாற்பட்டு,  பொருளாதார நடவடிக்கைகளின் அளவு மற்றும் நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை அடையாளம் கண்டுள்ளது.
ஆவணப்படுத்தப்பட்ட பரிவர்த்தனை வீத சரிசெய்தல் மற்றும் நிதி நிலுவை நடவடிக்கைகளின் சமநிலை ஆகியவை வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு, இந்த முதலீடுகளின் இழப்பு மற்றும் வர்த்தக சரிவில் இருந்து மீளவும், அதற்க்கான நடவடிக்கைகளை சமாளிக்கவும் உதவும்.

மேம்படுத்தப்படும் உற்பத்தி கொள்கைகள்
மூலப்பொருள் வழங்கல் மற்றும் தொழிலாளர்களின் உலகளாவிய நடமாட்டம் உள்ளிட்ட தற்போதைய நெருக்கடியின் காரணமாக எதிர்கொள்ளும் சவால்களை,  PwC (2020) ஒரு விளக்க வரைபடமாக்கியுள்ளது. கடன் வரிகளை விரிவுபடுத்துதல், உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைத்தல், குறுகிய கால நிதியுதவி வழங்குதல், வரிச்சுமையைக் குறைத்தல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல் போன்ற மீட்புக் கொள்கை நடவடிக்கைகளை இது அடையாளம் காட்டுகிறது, இது உற்பத்தியாளர்களின் பதில் நடவடிக்கைகளுக்கும், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும், எதிர்விளைவுகளை எதிர்கொள்ளவும் உதவும்.
COVID-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய, உடனடி பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் கூடுதலாக, அரசாங்கங்களும் உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய ஆதரவை வழங்கத் தொடங்கியுள்ளன. இதுவரை அறிவிக்கப்பட்ட பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான அரசாங்க உதவி தொகுப்புகள் தொற்றுநோயால் ஏற்படும் உடனடி பொருளாதார சேதத்தைக் கட்டுபடுத்துவதற்கான மீட்பு நடவடிக்கையாகக் கருதப்படுகின்றன. இது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வணிகங்க நிறுவனங்களுக்கு உதவி, முதலீடுகள், வேலை வாய்ப்புகளின் தக்கவைப்பை ஊக்குவிக்கின்றன.
English: Nicola Cantore, Frank Hartwich, Alejandro Lavopa, Keno Haverkamp, Andrea Laplane, and Niki Rodousakis
தமிழில்: லயா