வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75471 உயர்ந்து 24,06, 242 ஆகி இதுவரை 165,004 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  75,471 பேர் அதிகரித்து மொத்தம்24,06,242 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை4957 அதிகரித்து மொத்தம் 1,65,004 பேர் உயிர் இழந்துள்ளனர்.  6,24,914 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  54,225 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் சற்று குறைந்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  25,511 பேர் அதிகரித்து மொத்தம் 7,64,303 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1534 அதிகரித்து மொத்தம் 40,548 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 71,003  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 13,566 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4258  பேர் அதிகரித்து மொத்தம் 1,98,674 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 410 அதிகரித்து மொத்தம் 20,453 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 77,357 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3047 பேர் அதிகரித்து மொத்தம் 1,78,972 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 433 அதிகரித்து மொத்தம் 23,680 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 47,55 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2635 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 396  பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 19,718 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 1,101 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,52,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1260 பேர் அதிகரித்து மொத்தம் 17,615 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 38 அதிகரித்து மொத்தம் 559  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2854 பேர் குணம் அடைந்துள்ளனர்.