கொரோனாவை வீழ்த்திய 107 வயது ..


’வயதானவர்களுக்கு உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடையாது. சின்ன வியாதிக்கே அவர்கள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்’’ என்பது மருத்துவ கண்டு பிடிப்பு.

60 வயதுக்கு மேலான  ஆட்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்தால், அவர்களின் நாடி பிடித்துப் பார்க்கும் டாக்டர்கள் ’’சொந்த காரங்களுக்கு சொல்லி அனுப்பிடுங்க’’ என்று கூறுவதை வழக்கமாக்கி விட்டனர்.

அவர்களுக்கும் , மருத்துவ விஞ்ஞானத்துக்கும் சவால் விடுத்துள்ளார், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 107 வயது கிழவி, கோர்னிலியா ராஸ்.

கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி, அவர் தனது 107 வது பிறந்த நாளை தேவாலயத்தில் அமர்க்களமாக , கொண்டாடினார்.

இரு நாட்களுக்குப் பின்னர் அவருக்கும், கொண்டாட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ராசும், ஏனைய 40 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அடுத்தடுத்து 12 பேர் இறந்து போக-

ராசுக்கிழவி பிழைத்துக்கொண்டார்.

‘ பாட்டி.. நீங்கள், கொரோனா வைரசை வீழ்த்தி வெற்றி பெற்று விட்டீர்கள்’’ என்று பாராட்டு மழை பொழிகின்றனர். டாக்டர்கள்.

அதிசயக்கிழவி.

– ஏழுமலை வெங்கடேசன்