தாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன  சப்- இன்ஸ்பெக்டருக்கு  மீண்டும் வேலை..
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில்  உள்ள ராமலா காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், அலி.
46 வயதான இவர், 25 வருடங்களாக போலீஸ் இலாகாவில் வேலை பார்த்து வந்தார்.
காவல்துறை விதிமுறைகளை மீறி அலி தாடி வளர்த்து வந்துள்ளார்.
தாடியை எடுக்குமாறு உயர் அதிகாரிகள் பலமுறை கூறியும் அலி இதனை பொருட்படுத்தவிலைல்.
இதனால் அண்மையில் அலியை சஸ்பெண்டு செய்து உ.பி.காவல்துறை ஆணையிட்டது.
அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது.
இந்த நிலையில் தாடியை ‘’ஷேவ்’ செய்து, தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து, உயர் அதிகாரிகளுக்கு ,அலி கடிதம் அளித்தார்.
இதனையடுத்து அலி மீண்டும்  சப்- இன்ஸ்பெக்டர் பணியில் நேற்று சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
’’போலீஸ் விதிகளை மீறி தான் தாடி வளர்த்தது தவறு என அலி கடிதம் அளித்ததால் அவர் மீண்டும் உடனடியாக வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். விதிகளை இனி ஒழுங்காக கடைப்பிடிப்பதாக அலி உறுதி அளித்துள்ளார்’’ என பாக்பாத் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.
-பா.பாரதி.