பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் (Thirugnanam Mylapore Perumal ) அவர்களின் முகநூல் பதிவு: ·
” கூவத்தை தேம்ஸ் நதி தீரமாக மாற்றியே தீருவேன் ” என்று சபதம் செய்து, பட்ஜெட் போட்டு, அதில் துண்டு போட்டு, ஆய் துறை, ஔவை துறை, ஒய் துறை – என்று படகுத் துறைகளை கருணாநிதி கட்டியதெல்லாம் உண்மை !
அந்தத் துறைகள் இப்போதும் கருணாநிதியின் பழைய ஊழலை நிரூபிக்க –
பல்லிளிக்கின்றன !
படகு போக்குவரத்து நடந்ததாக சிலர் சொல்வது – உண்மை அல்ல !
படகு போக்குவரத்து துவக்க விழா நாளன்றே, ஒரு படகு கவிழ்ந்து – நாலு MLAக்கள் கூவத்தில் விழுந்தனர் ! அத்தோடு முடிந்தது, படகு போக்குவரத்து !
கூவத்தை ஆக்கிரமிக்கும் வேலை, சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதும் லேசாகத் துவங்கி, 1967ல் திமுக ஆட்சி வந்ததும், முழு வீச்சில் நடந்தது !
பொதுப் பணித் துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி AE, EE,லோகல் கவுன்சிலர், மேயர்கள் துணையோடு – 1977 தேர்தலுக்கு முன்பு – கூவம் ஆறுக்குள்ளேயே 1280 வீடுகள், 400 மெக்கானிக் ஷெட்கள், காயலான் கடைகள், லைனிங் கடைகள், ஆட்டோ மெக்கானிக் ஷாப்கள், டீ கடைகள் வந்துவிட்டது !
இப்போதும் இருக்கிறது !
இந்த கடைகள், வீடுகளுக்கு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது !
ஓட்டு வாங்குவதற்காகவும் அவர்களிடம் பேரம் பேசி பணம் பிடுங்கவும் கூவத்தை ஆக்கிரமித்த மக்களை – மேலும் உற்சாகப்படுத்தினர், லோகல் திமுக செயலாளர்கள், வட்ட கவுன்சிலர்கள் !
சென்னையில் – கூவத்தில் வசிக்கும் வாக்காளர்கள் 10 ஆயிரம்பேர் இருக்கும் ! இவர்களுக்கு ரேஷன் கார்டும் இருக்கு ! ஆதார்கூட இருக்கு !
கூவத்தைவிட நாற்றம் அடிக்கும்…. திமுக செய்த கூவம் ஊழலைப் பேசினால் !
திமுகவை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சொல்லின் செல்வர் – EVK சம்பத், [ EVKS இளங்கோவனின் தந்தை ] நுங்கம்பாக்கம் ஏரியில் – 1969 இறுதியில், காங்கிரஸ் பொதுக் கூட்டம் ஒன்றில்… ”கூவமும் – கருணாநிதியும் வேறு வேறல்ல. ரெண்டும் ஒண்ணுதான். அப்படி நான் சொன்னதற்கு – கூவம் வேண்டுமானால், என் மீது வருத்தப்படலாம். வழக்குப் போடலாம், ‘என்னை ஏன் கருணாநிதியுடன் கம்பேர் செய்தாய் ? நான் அவ்வளவு மட்டமா ?’ என்று கேட்கலாம்…” இவ்வாறு பேசினார் !