நெல்லை:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் நெல்லைக் கண்ணன்,  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இஸ்லாமியர்கள்  கொலை செய்யுங் கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து, நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன்,  பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இஸ்லாமியர்கள் கொன்று வீசுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. நெல்லைக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினரும் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், நெல்லைக்கண்ணன் மீது,  குற்றம் செய்யத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 504,505,505(2) மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.