டைம் ஆஃப் டே : பகல் இரவு கட்டண முறையால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது :

1.மாலை நேர மின் கட்டணம்:

மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் இது விதி தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இந்தத் திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு
நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

2. நுண் மானி (Smart Meters) பொருத்திய பிறகு தண்டத்தொகை வசூல் செய்வது குறித்து :

தற்போது தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படாததால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

என்று விளக்கமளித்துள்ளது.