டெல்லி: பீகாரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ‘அரசியலமைப்பின்படி சரியானதே என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு , இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இந்த நடைமுறை அரசியலமைப்பு ரீதியாக கட்டாயமானது என்று வலியுறுத்தியது.

பிகாா் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் உள்பட பல வாக்காளர்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படுகின்றன. பீகாரில், நேபாளம், வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளும் போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. , இதற்கிடையில், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாபந்தன் கூட்டணி சார்பில் பாட்னாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுச் செயலர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளார். பாட்னாவுக்கு வருகைதந்த ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் பேரணியாகச் செல்லும் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இத்ற்கிடையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டது, வழக்கின் விசாரணையின்போது, தேர்தல் ஆணையத்தின் இந்தப் பயிற்சி அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ம பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் கூறியது.
விசாரணையின்போது, மனுதாரர்களில் ஒருவரின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணமாக இருந்தாலும், பீகார் SIRக்கு ECI அதை ஏற்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆதார் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று ECIயிடம் கேட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “ஆதார் அட்டையை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த முடியாது” என்றார்.
“ஆனால் குடியுரிமை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் அல்ல, உள்துறை அமைச்சகத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை,” என்று நீதிபதி துலியா கூறினார்.
அதற்கு பதில்கூறிய தேர்தல் ஆணை வழக்கறிஞர், அரசியல் சாசன “பிரிவு 326 இன் கீழ் எங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன,” என்றுபதிலளித்தார்.
இதையடுத்து, இந்த நடவடிக்கை ECI முன்னதாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்று பெஞ்ச் பதிலளித்தது.
“2025 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள ஒருவரின் வாக்குரிமையை நீக்குவது என்ற உங்கள் முடிவு, அந்த நபரை இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கட்டாயப்படுத்தும், மேலும் இந்த முழு மோசடியையும் கடந்து, அதன் மூலம் அடுத்த தேர்தலில் அவரது வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும். குடிமக்கள் அல்லாதவர்கள் அந்தப் பாத்திரத்தில் நீடிக்காமல் பார்த்துக் கொள்வதற்காக, தீவிரமான பயிற்சி மூலம் வாக்காளர் பட்டியலை நீங்கள் சுத்திகரிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் முன்மொழியப்பட்ட தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் முடிவு செய்தால்…” என்று நீதிபதி பாக்சி குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் காரசார வாதங்களை முடிந்து, தேர்தல் ஆணையத்தின் முடிவு செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் பச்சை கொடி காட்டியது.
முன்னதாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கத்தில், பிகாரில் மொத்தமுள்ள 7,89,69,844 வாக்காளா்களையும் உள்ளடக்கியே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெயா், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்யும் வகையிலான விண்ணப்பங்கள் 7.69 கோடி வாக்காளா்களுக்கு ( 97.42) வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை வாக்காளா்கள் நிரப்பிய பின்பு அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் பூத் அளவிலான அதிகாரிகள் குறைந்தபட்சம் மூன்று முறை நேரில் செல்கின்றனா். எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் தோ்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. அதன்படி முதல்முறை வீடுகளுக்கு பூத் அதிகாரிகள் நேரில் செல்லும் பணிகள் நிறைவடைந்தன. இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 25-ஆம் தேதிக்கு முன் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கும் அனைத்து வாக்காளா்களும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் புதிய வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவா்.
அரசமைப்பு சட்டப்பிரிவு 326 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன்படி பிரிவுகள் 16 மற்றும் 19-இன்கீழ் வாக்களிக்க தகுதி பெற்றிருக்க வேண்டும். 18 வயதை பூா்த்தி செய்து இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வேறு எந்த சட்டத்தின் கீழும் தகுதிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது. தீவிர விசாரணைக்குப் பிறகே ஒருவா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படுவாா். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பின், வாக்காளா்கள் சமா்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் அவா்களின் வாக்களிக்கும் தகுதியை தோ்தல் பதிவு அதிகாரி (இஆா்ஓ) மதிப்பீடு செய்து முடிவெடுப்பாா். இதில் வாக்காளா் குறித்த தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு அவா் முதலில் நோட்டீஸ் அனுப்புவாா். அதன்பிறகு உரிய ஆணைகளை பிறப்பிப்பாா். இஆா்ஓ முடிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வாக்காளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம். மாவட்ட ஆட்சியரின் முடிவும் திருப்திகரமாக இல்லை என நினைக்கும் வாக்காளா்கள் தலைமை தோ்தல் அதிகாரியிடம் (சிஇஓ) மேல்முறையீடு செய்யலாம். மக்களவை பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 24-இன்கீழ் இந்த மேல்முறையீடு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா். திருத்தம் அவசியம்: பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் பூத் அதிகாரிகள் மத்தியில் செவ்வாய்க்கிழமை பேசிய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது அவசியமானது’ எனத் தெரிவித்தாா்.