டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு விவாதிக்க திமுக சார்பில் வலியுறுத்திய நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்த மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31 குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இதைத்தொடந்து பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படும் வவையில், இரண்டாவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொகுதி சீரமைப்பால் தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில், அதுகுறித்து அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என மக்களவை திமுக எம்.பி. கனிமொழி எம்பி. ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார். அதன்படி, இன்று விவாதிக்க வேண்டும் என அவையில் வலியுறுத்தினார்.
ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா அதை ஏற்க மறுத்துவிட்டதுடன், விவாதிக்க அனுமதி தர முடியாது என்று கூறிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை திமுக எம்.பி.க்கள் கனிமொழி தலைமையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் நடத்த மத்தியஅரசு அனுமதி மறுக்கிறது, அதுகுறித்து அனுமதி விவாதிக்க மறுக்கிறது என கனிமொழி . குற்றம் சாட்டினார்.