தருமபுரி:
7.5 % இட ஒதுக்கீட்டால் காவலர் ஒருவர் மருத்துவராக உள்ளார்.
தருமபுரி முதுக்கப்பட்டியை சேர்ந்தவர் சிவராஜ். அரசு பள்ளியில் படித்து விட்டு மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார்.
2022-2023ம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவம் / பல் மருத்துவம் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவம் பல் மருத்துவம் இடங்கள் சேருவதற்கான 7.5% அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 2695 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 2674 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் ஆண் விண்ணப்பதாரர்கள் 764 பேரும், பெண் விண்ணப்பதாரர்கள் 1910 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவத்திற்கு (MB8S) 459 இடங்களும், பல் மருத்துவத்திற்கு (BDS) 106 இடங்கள் என ஆக மொத்தம் 565 இடங்கள் உள்ளது.
இந்நிலையில், 7.5 % இட ஒதுக்கீட்டால், சிவராஜுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.