பெங்களூரு

லேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுக்கும்  மல்லையாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த செய்தி

மலேரியாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பூர்வீகத்தை அறிய நாம் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட 1799 ஆம் வருடத்துக்குச் செல்ல வேண்டும்.  ஹைதர் அலியின் மகனும்  ஸ்ரீரங்க பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு  மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தவருமான திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படைகளால் தொற்கடிக்கபட்டார். அதைக் கொண்டாட முடியாதபடி பிரிட்டிஷ் வீரர்களை மலேரியா தாக்கியது.

அப்போதைய கர்நாடகாவில் கொசுத் தொந்தரவு மிகவும் அதிகமாதலால் மலேரியாவும் அதிகம் இருந்தது.  உள்ளூர் வாசிகளுக்கு ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உணவுப் பழக்கங்களால் மலேரியா தாக்கவில்லை.  ஆனால் பிரிட்டிஷ் வீரர்களை மலேரியா வெகுவாக தாக்கியது.  பெங்களூரு நகரின் குளிர்ந்த நிலை பிரிட்டிஷரை கவர்ந்த  போதிலும் அங்கும் கொசுத் தொல்லையால் மலேரியா மிகுந்து இருந்தது.

அந்த வேளையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குயினைன் என்னும் ஒரு மருந்தை மலேரியாவைக் குணப்படுத்தக் கண்டறிந்தனர்.   அது அப்போது அதிகம் சோதிக்காத நிலையில் இருந்த போதிலும் அதை  இந்தியாவில் உள்ள வீரர்களுக்கு பிரிட்டன் விநியோகம் செய்தது.  இது மலேரியாவைத் தடுத்து நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்தாலும்  அந்த மருந்தின் எக்கச்சக்கமான கசப்பால் அதை யாரும் உட்கொள்ளவில்லை.

எனவே அதை வீரர்களைச் சாப்பிட வைக்க அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டறிந்தனர். ஜுனிபர் என்னும் மூலப்பொருள் மூலம் செய்யும் மதுவில் இந்த மருந்தைக் கலந்தால் கசப்பு தெரிவதில்லை என்பதே அந்த வழியாகும்.  எனவே வீரர்களுக்கு இதைப் பழக்கினர். வீரர்களும் தற்போது தயக்கமின்றி அதை உட்கொண்டனர்.  இது ஜுனிபர் மூலம் செய்யப்படுவதால் ஜின் அண்ட் டானிக் என ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டது.  டானிக் என்பது குயினைன் மருந்தே ஆகும்.

இந்த மருந்தை தொடர்ந்து வீரர்கள் சாப்பிட வசதியாகப் பிரிட்டிஷ் அரசு ஜின் மற்றும் குயினைன் மருந்தை இலவசமாக வீரர்களுக்கு வழங்கியது.  இந்த சுவையை விரும்பிய வீரர்களும் இதை தொடர்ந்து பருகி வந்தனர்.  இதற்காக ஜின் தயாரிக்கும் மது தொழிற்சாலையைப் கிழக்கு இந்திய கம்பெனி பெங்களூரு பகுதியில் அமைத்தது   அதில் வேறு மது வகைகளும் தயாரிக்கப்பட்டன.

பல மருத்துவர்களும் ஜுரத்துக்கு ஜின் இல்லாமல் குயினைன் மருந்தை டானிக் என்னும் பெயரில் நோயாளிகளுக்கு அளிக்கத் தொடங்கினர்.  இதன் மூலம் மேற்கத்திய மருந்துகள் பலவற்றுக்கு மக்கள் டானிக் என பெயர் சூட்டினர்.  அதன் பிறகு குயினைன் என்னும் மருந்து பல பெய்ர்கலில் பல அவதாரம் எடுத்தது  அதில் முக்கியமானது ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் ஆகும்.  அது தற்போது மலேரியாவுக்கு மட்டுமின்றி கொரோனாவுக்கும் பயன்படுகிறது.

பெங்களூருவில் பிரிட்டிஷார் காலத்திலேயே அமைக்கப்பட்ட மது உற்பத்தி தொழிற்சாலை சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியத் தொழிலதிபர் ஒருவரால் விலைக்கு வாங்கப்பட்டது.  அவர்தான் விட்டல் மல்லையா.  இவர் தற்போது வங்கிக் கடன் என்னும் பல மலைகளை விழுங்கி ஏப்பம் விட்டுள்ள விஜய் மல்லையாவின் தந்தை ஆவார்