புதுடெல்லி:
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களை கவரும் வகையில் வாக்குறுதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம், எல்கேஜி முதல் பட்டமேற்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி, நிதி பற்றாக்குறை இன்றி பார்த்துக் கொள்வது, மாணவர்கள் உரிமை ஆணையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்தபின், அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதையும் தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் செயல்படுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.