டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல், கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் தவிர மற்ற 4 மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற தோல்வி குறித்து விவாதிக்க இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.  ‘இதில், கொரோனா பரவல், தடுப்பூசி போடும் பணி, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஜூன் மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என கடந்த ஜனவரி 22ந்தேதி நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது அதன்படி, ஜூன் 23 ஐ காங்கிரஸ் மத்திய தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால், தற்போது கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், . தேர்தலுக்கான அட்டவணையை  ஒத்தி வைப்பதாக,  தேர்தல் குழுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூட்டத்தில் தெரவித்தார். இந்த விவாதத்தின்போது,  பலர் ராகுலை தலைவராக நியமிக்க வலியுறுத்திய நிலையில், சில மூத்த தலைவர்கள், கொரோனா தொற்று காரணமாக, தற்போது தேர்தல் வேண்டாம், தேர்தலை ஒத்தி வையுங்கள் என்று  வலியுறுத்தினார்.

இதையடுத்து,  தொற்றுநோய் காரணமாக அடுத்த கட்சித் தலைவருக்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிறைவேற்றி உள்ளது.