காங்கிரஸ் புதிய தலைவர் குறித்து முடிவு செய்ய காரிய கமிட்டி நாளை கூடுகிறது..

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.

இதனை தொடர்ந்து சோனியாகாந்தி, தற்காலிக தலைவராக (ஒரு வருடத்துக்கு மட்டும் )தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நாளை ( திங்கள்கிழமை) நடக்கிறது.

‘காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் காரிய கமிட்டி நடைபெறுகிறது’’ என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

காரிய கமிட்டியின் நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

‘’நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி, மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்’’ என்று காங்கிரஸ் கட்சி இரு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

எனவே காணொலி காட்சி மூலம் நடைபெறும் நாளைய காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பா.பாரதி.