டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடக்கிறது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் கோவா சென்று உள்ளார். இந் நிலையில் நாளை காலை 11 மணிக்கு காணொளி காட்சி வழியாக கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், அகமது படேல், தருண் கோகோய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மேலும், புதிய தலைவர், பீகார் தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.