டில்லி

டில்லியில் வரும் 9 ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது.

கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகக் காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இயங்குகிறது. கமிட்டியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

வரும் 9 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பெண்கள் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற மசோதாக்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

ஐதராபாத்தில் இதற்கு முன்னர்  2 நாள் கூட்ட நடந்த போது அடுத்து வரும் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.  அந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம், சமத்துவம், சமூக மற்றும் பொருளாதார நீதி ஆகியவற்றில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் அறிவிக்கப்பட்டது.