கேரள மாநிலத்தில் உள்ள எலம்குளம் என்ற கிராமம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகனான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பிறந்த ஊராகும்.
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சி முதன் முறையாக கேரள மாநிலத்தில் அமைந்த போது, முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர், நம்பூதிரிபாடு.
அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எலம்குளம் பஞ்சாயத்தில் உள்ள 16 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 8 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
இதனால் சீட்டு குலுக்கி போட்டு பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த குலுக்கலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாறன் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு எலம்குளம் பஞ்சாயத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
நம்பூதிரிபாடு அவதரித்த பூமியில் இடதுசாரிகள் தோல்வி அடைந்திருப்பது, ‘காம்ரேட்’ கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
– பா. பாரதி