ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் கண்டிக்காததற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளதுடன், இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் தனது தார்மீக தைரியத்தைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இராஜதந்திரம் மூலம் நெருக்கடியைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தையும் காங்கிரஸ் வாதிட்டுள்ளது.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் (தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ், ‘ஈரான் மீதான வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்று அபத்தமானது’ என்று கூறினார்.
“ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இன்னும் கண்டிக்கவில்லை.”
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் அவர் மௌனத்தை கடைபிடித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.