பெங்களூரு

ரும் 19 ஆம் தேதி அன்று கர்நாடக ஆளுநரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக முதல்மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தி அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இது குறித்து முதல்வர்  மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய அளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது

வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் சித்தராமையா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கர்நாடக கவர்னர் அனுமதியளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. சித்தராமையா மீதான விசாரணைக்கு மத்திய பாஜக அரசின் சதி இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.