லக்னோ: “பசுவைக் காப்பாற்றுங்கள் – விவசாயியைக் காப்பாற்றுங்கள்” என்ற பெயரில், உ.பி.யில் காங்கிரஸ் கட்டசி நாளை பாத யாத்திரை தொடங்குகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் இன்று 30வது நாளை எட்டியுள்ளது. ஆனால், மத்தியஅரசு, சட்டத்தை வாபஸ் பெற முடியாது என பிடிவாதமாக உள்ளது. வேளாண் சட்டம் திரும்பப்பெறக் கோரி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து பெற்ற மனுவை நேற்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராகுல்காந்தி உள்பட மூத்த தலைவர்கள் வழங்கினர்.
இந்த நிலையில், உ.பி. மாநிலத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், காங்கிரஸ் கட்சி நாளை பாத யாத்திரை தொடங்குகிறது.