டில்லி

ளைஞர்கள் தொழில் தொடங்க காங்கிரஸ் அளிக்கப்போகும் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகவல் அளித்துள்ளார்.

நடைபெற உள்ள மக்களவைதேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது.   காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதிய திட்டம் மக்களிடையே குறிப்பாக ஏழை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   இது நடைமுறைப்படுத்த முடியும் என பல பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் இளைஞர்கள் பலர் வேலை இன்றி உள்ளனர்.   இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கவில்லை என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

வேலை இன்மையை நீக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு சொந்த தொழில் தொடங்க தேவையான வசதிகள் அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

இளைஞர்களே,

புதிய தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? இந்தியாவுக்கு புதிய வேலைவாய்ப்பை அளிக்க விரும்புகிறீர்களா?

இதோ உங்களுக்கான எங்கள் திட்டங்கள்

1.       எந்த தொழில் தொடங்கவும் மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி தேவை இல்லை

2.       முழுமையான வரி விலக்கு

3.       நீங்கள் உருவாக்கும் வேலை வாய்ப்பை ஒட்டி ஊக்கத் தொகையும் வரி விலக்கும்

4.       எளிதான வங்கிக் கடன் வசதி

என பதிந்துள்ளார்

இந்த டிவிட்டர் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.