புதுடெல்லி:
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் கலந்துரையாடியுள்ளார் ராகுல் காந்தி. இதில் இந்தியா, இங்கிலாந்து,நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியவை சேர்ந்த 4 செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
ராகுல்காந்தியுடன் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த விபின் கிருஷ்ணன் கலந்துக்கொண்டார், இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூசிலாந்தை சேர்ந்த செவிலியர் அனு ரங்கத், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நரேந்திர சிங், இங்கிலாந்தை சேர்ந்த ஷெரில்மோல் புரவாடிஆகியோர் கலந்துகொண்டனர்.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தாக்கத்தில் இவர்களின் பணிகள் குறித்து ராகுல் காந்தி கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் இந்தியவை சேர்ந்த செவிலியர்கள் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளிள் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் மிகவும் போற்றப்படவேண்டியவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.