டெல்லி

த்திய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள்ளது.

முஸ்லிம்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாய் மசூதி, முஸ்லிம்கள் கல்வி, மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1955 ஆம் ஆண்டு இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இன்று இந்த சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய்ப்பட்டது இம்மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

வஃக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்பி வேணுகோபால்,

“முஸ்லீம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிப்பது மதத்தின் மற்றும் நம்பிக்கையின் மீதான நேரடி தாக்குதல். மகராஷ்டிரா அரியானா, தேர்தலுக்காகவே பிரத்யேகமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை காங்கிரஸ் கண்டிக்கிறது”

என்று தெரிவித்துள்ளார்.