டில்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்று காலை டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ராகுல் காந்தியும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்ததாகவும், ஆனால், காரிய கமிட்டி குழு உறுப்பினர்கள் அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா, ராகுல்காந்தி ராஜினாமா என்ற செய்த தவறானது என்று தெரிவித்து உள்ளார்.