புதுடெல்லி:

தகுதியான கல்வி நிறுவனங்களில் தொழில் படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு படிப்போருக்கு மட்டுமே கல்விக்க கடன் வழங்க பாஜக அரசு எடுத்துள்ள முடிவை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.

தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுரஜ்வாலா.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுரஜ்வாலா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தொழில் படிப்பும் மற்றும் தொழில் நுட்ப படிக்கும் மாணவர்கள் தகுதியான கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

நாக் அங்கீகாரம் பெற்ற மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கல்விக் கடன் வழங்கும் வகையில் மாதிரி கல்விக் கடன் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகர் வெளியிட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு பாஜக அரசு தடை போட்டுள்ளது.
லட்சக்கணக்கான மாணவர்களை இந்த அரசு தண்டிக்கிறது.

தொழில் படிப்பு மற்றும தொழில்நுட்ப படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.