மும்பை:

க்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ்   கட்சி உள்ளது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வரும்  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. அப்போது அவர், பேசியதாவது:

“மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர  வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என கட்சி விரும்புகிறது.

மக்களை கட்டுப்படுத்தும் கருவியாக ஆதார் மாறியுள்ளது.

நானும், ராஜீவ்காந்தியும் முக்கிய கோயில்களுக்கு சென்று இருந்தாலும் அதைவெளியே காண்பித்துக்கொண்டதில்லை. காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என மக்களிடம் தவறாக பாரதீய ஜனதா பரப்புகிறது.  காங்கிரஸ் அனைத்து மக்களுக்குமான கட்சி.

ராகுல் காந்தி  விடுமுறை கால அரசியல்வாதி இல்லை. ராகுல் காந்தி  மூத்த தலைவர்களை புறக்கணிப்பதில்லை. அதிகளவில் இளைஞர்கள், கட்சியில் சேர வேண்டும் என ராகுல்  விரும்புகிறார்.  எனது கருத்தை ராகுல் மீது திணிப்பதில்லை.

அரசியலில் தனது பங்கு குறித்து பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும்.

மக்களுடன் ஒன்றிணைய புது வழிகளை காங்கிரஸ் கண்டுபிடிக்க வேண்டும். மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர  வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்ய இருக்கிறேன். வெற்று முழக்கங்கள் மீது  எனக்கு நம்பிக்கையில்லை.

நமது சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது.  தலித்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறை நடக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசின் துறைகள் ஏவிவிடப்பட்டு இருக்கின்றன.  வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட கட்டுப்பாடுகள் இல்லை. மாற்று கருத்து வெளியிட அனுமதிக்கப்படவில்லை. நல்லுறவு, நல்லிணக்கம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. தேசத்தை கட்டமைத்தவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது” என்று சோனியா காந்தி பேசினார்.