சென்னை:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு காரணமாக நேற்று கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் விமான நிலை யத்திலேயே கைது செய்து டில்லி அழைத்துச் சென்றனர்.
அவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரசார் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ரூ.10 லட்சம் முறைகேட்டிற்காக பரிமாற்றம் செய்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டு டில்லி அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் கைதானதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.