டெல்லி: டிசம்பர் 18 ஆம் தேதி அமேதியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பாதயாத்திரை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கால், நாட்டின் பணவீக்கம் கடுமையாக குறைந்துள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ”மோடி அரசின் தோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகள், அதனால் ஏற்பட்ட பணவீக்கம் ஆகியவை குறித்து மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 15 நாட்ள் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது.
அதன் அடுத்தபடியாக, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவாரம் பாதயாத்திரையாக கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மோடி தலைமையிலான மத்தியஅரசுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டிசம்பர் 18 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.